சதித் திட்டம்: இந்தோனீசிய குழுவில் பல உறுப்பினர்கள்

சதித் திட்டம்: இந்தோனீசிய குழுவில் பல உறுப்பினர்கள்

1 mins read

ஜகார்த்தா: சிங்கப்பூரைத் தாக்க சதித் திட்டம் தீட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாத்தாம் தீவில் சென்ற வாரம் கைது செய்யப்பட்ட 6 பேர் இந்தோனீசியாவில் உள்ள ஒரு பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று இந்தோனீசியப் போலிசார் கூறியுள்ளனர். அந்தக் குழுவில் பல உறுப்பினர்கள் இருப்பதாகவும் கடந்த ஈராண்டுகளாக அக்குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தேசிய போலிஸ் படைப் பேச்சாளர் ரஃபிலி அமர் கூறியுள்ளார். அக்குழு இணை-யம் மூலமாக பெரும்பாலான உறுப்பினர்களைச் சேர்த்ததாகவும் சிரியாவில் ஐஎஸ் குழுவில் சேர்ந்த இந்தோனீசியர் பஹ்ருன் நயிமின் உத்தரவின்படி அந்த இந்தோனீசியக் குழு செயல்பட்டு வருவதாகவும் ரஃபிலி கூறினார். பாத்தாமில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.