தோக்கியோ விழாவில் குண்டு வீச்சு

தோக்கியோ விழாவில் குண்டு வீச்சு

1 mins read

தோக்கியோ: தோக்கியோவில் கோடைகால விழாவை முன்னிட்டு மக்கள் தெருவில் ஒன்று கூடியிருந்தபோது அங்கு 6 பெட்ரோல் குண்டுகள் வந்து விழுந்ததில் 15 பேர் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். அருகில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தி லிருந்து அந்த பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அந்த குண்டுகளை வீசியவர் என்று சந்தேகிக்கப்பட்ட சுமார் 60 வயதுடைய ஆடவர் ஒருவர் அந்தக் கட்டடத் தின் 3வது மாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிலிட்டுக் கொண்டு இறந்து கிடந்த தாக ஜப்பானியப் போலிசார் கூறினர்.