மலேசிய போலிசார் இதுவரை ஒன் பது பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடித்து இருப்பதாக அந்நாட் டின் பயங்கரவாத எதிர்ப்புப் போலிஸ் படையின் துணை இயக்கு நர் அயோப் கான் தெரிவித்து உள்ளார். பொழுதுபோக்குக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசாங்க அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட இருந்த தாக்கு தல்களும் அவற்றுள் அடங்கும் என்று மலேசியாவிலுள்ள வெளி நாட்டுத் தூதர்களிடம் பாதுகாப்பு தொடர்பாக விளக்கியபோது அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை 230 பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டு உள்ளதாகவும் அவர்களுள் 200 பேர் மலேசியர் என்றும் அவர் கூறினார். அவர்களில் 84 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட அதே நேரம் 62 பேர் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 90 மலேசி யர்கள் ஐஎஸ் பயங்கரவாத நட வடிக்கைளில் ஈடுபடுவதற்காக சிரியா சென்றதாகவும் அவர்களில் எட்டுப் பேர் திரும்பி வந்துவிட்ட தாகவும் திரு அயோப் கான் தெரிவித்தார்.

