பங்ளாதேஷில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக வேலைக்காக வும் படிப்புக்காகவும் வெளிநாடு களுக்குச் சென்ற 38 பேர் சமயத் தீவிரவாதத்தால் கவரப்பட்டிருக்கக்கூடும் என்று பங்ளாதேஷ் போலிசார் நடத்திய புலன் விசா ரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் சென்ற நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா போன்றவையும் அடங்கும் என்றும் அந்த விசாரணை குறிப்பிடுகிறது. பங்ளாதேஷில் இருந்து காணா மற்போன இவர்களில் பெரும்பாலானோர் துருக்கி வழியாக சிரியா சென்று சேர்ந்திருக்கலாம் என் றும் ஐஎஸ் பங்கரவாத அமைப்பில் அவர்கள் இணைந்திருக்கக்கூடும் என்றும் பங்ளாதேஷ் தலைமை போலிஸ் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"எட்டு நாடுகளுக்குச் செல்வ தாகக் கூறி கிளம்பிச் சென்ற அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழைய முயன்றால் கைது செய் யப்படுவார்கள். அவர்களைப் பற்றிய விவரம் குடிநுழைவு போலிசாரிடம் தரப்பட்டுள்ளன," என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலிஸ் அதிகாரி கூறினார். இந்த 38 பேரில் 13 பேர் சிங்கப்பூர் செல்வதாகக் கூறிச் சென்றதாகவும் பின்னர் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிய வில்லை எனவும் தகவல்கள் தெரிவித்தன. ஏழு பேர் மலேசியாவுக்கும், ஒன்பது பேர் துருக்கிக்கும், நால்வர் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக் கும் சென்றதாகக் கூறப்பட்டது.
மேலும், ஜப்பானுக்கு இருவரும் கத்தார், ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு வரும் சென்ற பின்னர் காணாமல் போய்விட்டதாக போலிசார் தெரிவித்தனர். சமயத் தீவிரவாத சிந்தனையில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் 51 பேரில் இந்த 38 பேரும் அடங்குவர். இதர 13 பேர் பங்ளாதேஷின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடந்த ஈராண்டுகளாகக் காணாமல் போனவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

