புத்ரஜெயா: மலேசியாவின் முன் னாள் பிரதமர் டாக்டர் மகா தீருடன் சேர்ந்து புதிய கட்சி யைத் தொடங்கப் போவதாக கடந்த வாரம் அறிவித்த முன்னாள் துணைப்பிரதமர் முகைதின் யாசின் நேற்று புதிய கட்சிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
'பெர்சத்து' என்று சுருக்க மாக அழைக்கப்படும் புதிய கட்சியின் பெயர் 'தேசிய மண் ணின் மைந்தர்கள் கட்சி'. இதற்கான விண்ணப்பத்தை அரசியல் கட்சிப் பதிவு அலுவல கத்தில் நேற்று அவர் சமர்பித் தார். பின்னர் செய்தியாளர் களிடம் மலாய் மொழியில் பேசிய திரு முகைதின், "இந்தக் கட்சியில் சீனர்களும் இந்தியர் களும் இணை உறுப்பினர்களாக சேரலாம்," என்றார். தற்போதைய அம்னோவில் மண்ணின் மைந்தர்கள் அல் லாதவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"மண்ணின் மைந்தர்களான மலாய்காரர்கள், சாபா, சரவாக் பூர்வீகத்தைக் கொண்டவர்கள், ஒராங் அஸ்லி எனும் பூர்வ பழங் குடியினர் உட்பட அனைத்து மலேசியர்களும் கட்சியில் இணையலாம். இதர மலேசியர்கள் இணை உறுப்பினர்களாக சேர முடியும். இவர்களுக்கு மற்ற உறுப்பினர்களைப் போல் அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால் கட்சிப் பதவி களுக்கு வாக்கு அளிக்கவோ போட்டியிடவோ முடியாது. இருப் பினும் கட்சியில் எந்தப் பதவிக் கும் இவர்கள் நியமிக்கப்படலாம் என்றார் திரு முகைதின்.
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நேற்று புதிய கட்சிக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். கோப்புப் படம்: ஏஎஃப்பி

