பேங்காக்: தாய்லாந்தில் ராணுவம் முன்மொழிந்த புதிய அரசியல் சாசனத்திற்கு 61.35 விழுக் காட்டினர் ஆதரவு தெரிவித் துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த சாசனம் குறித்து மக்களின் கருத்தை அறிய அங்கு ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அதிகாரபூர்வ முடிவுகளை ஆணையம் நேற்று அறிவித்தது. மக்களின் இந்த ஆதரவு தாய்லாந்து பிரதமர் சான்=ஓசா விற்கு கிடைத்த பெரும் வெற்றி என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். புதிய சாசனத்திற்கு 38.65 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். புதிய சாசனத்திற்கு ஆதர வாக மக்கள் வாக்களித்தால் அங்கு தேர்தல் நடக்க வாய்ப் பில்லை என்று பல அரசியல் கட்சிகள் முன்னதாகக் கூறியிருந் தன. இந்நிலையில் தேர்தல் முன்பு அறிவித்தபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று பிரதமர் உறுதியளித் துள்ளார். நிலையான அரசாங்கம் அமைய புதிய சாசனம் வழிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு 61.35% ஆதரவு
1 mins read

