ஹில்லரிக்கு எதிராக டிரம்ப் கருத்து

ஹில்லரிக்கு எதிராக டிரம்ப் கருத்து

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வரும் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனை கடுமை யாகக் குறை கூறி வருகிறார். திருமதி ஹில்லரியை 'பிசாசு', பொய் கூறுபவர் என்றெல்லாம் விமர்சித்த டிரம்ப் தற்போது ஹில்லரிக்கு எதிராக வன் முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியுள்ளார். வடக்கு கரோலினாவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், வரும் தேர்தலில் ஹில்லரி அதிபர் ஆகிவிட்டால் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையை ரத்து செய்துவிடுவார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமையை ரத்து செய்ய ஹில்லரி விரும்பினால், அதற்கு வசதியாக நீதிபதிகளை அவரே தேர்ந் தெடுப்பார் என்றும் அதற்குப் பின்னர் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் டிரம்ப் கூறினார். ஆகவே துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை பெற்றவர்கள் தங்கள் உரிமையை ஒழிக்க விரும்பும் ஹில்லரி அடுத்த அதிபராக வருவதைத் தடுக்க முடியும் என்பதை டிரம்ப் தமது உரையில் மறைமுகமாகக் குறிப் பிட்டிருந்தார்.