பயங்கரவாதத்திற்கு ஐஎஸ் வழங்கும் நிதி

பயங்கரவாதத்திற்கு ஐஎஸ் வழங்கும் நிதி

1 mins read

பாலி: பயங்கரவாதம் அனைத் துலகப் பிரச்சினையாக உரு வெடுத்துள்ள வேளையில் பயங்கரவாதத்தை ஒழிக்க சட்ட அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் எல்லை நிர்வாக ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உலக நாடுகள் உறுதி பூண்டுள் ளன. பாலியில் நேற்று தொடங்கிய அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பயங்கர வாதச் செயல்களையும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் ஒழிக்க ஒத்துழைப்பை எந்த வகையில் அதிகரிக்கலாம் என்பது குறித்து விவாதித்தனர். ஐஎஸ் மிரட்டல் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அந்த இரண்டு நாள் மாநாட்டை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தொடங்கி வைத்துப் பேசினார். அந்த மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர் களும் ஐநா, அனைத்துலக பண நிதியம் உள்ளிட்ட பல அமைப்பு களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.