வான்கூவர்: 'பயங்கரவாத அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்' என நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் போலிசால் அடையாளம் காணப்பட்ட ஒருவரை கனடிய போலிசார் நேற்று முன்தினம் ஓன்டாரியோ நகரில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது சுட்டுக்கொன்றனர். தேசியப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக்கூடிய நபர் என சந்தேகிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை எடுக்கப் பட்டதாக 'தி ராயல் கனடியன் மவுண்டட் போலிஸ்' குறிப்பிட்டது. கொல்லப்பட்ட நபர் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வந்ததற்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஆரன் டிரைவர் எனக் கூறப்படுகிறது. ஆரனின் மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அவரது குடும்பத்தார் ஆரனின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.
கனடா: சந்தேக நபர் சுட்டுக் கொலை
1 mins read

