தெற்கு பிரான்சில் காட்டுத் தீ; 1,000 பேருக்குமேல் வெளியேற்றம்

தெற்கு பிரான்சில் காட்டுத் தீ; 1,000 பேருக்குமேல் வெளியேற்றம்

2 mins read
4a026eec-6acf-465f-b338-af02df37e3de
-

விட்­ரோ­லிஸ்: பிரான்­சின் தெற்குப் பகு­தி­யில் உள்ள மார்­சீ­லில் கொழுந்­து­விட்டு எரியும் காட்டுத் தீயினால் ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் வீடு­களி­லி­ருந்து பாது­காப்­பான இடங்களுக்கு வெளியேற் றப்­பட்­டுள்­ள­னர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,500 தீயணைப்­பா­ளர்­களை பிரான்சு தீயணைப்பு நட­வ­டிக்கை­களில் ஈடு­படுத்­தி­யது. சிங்கப்­பூர் நேரப்­படி நேற்று முன்தினம் இரவு 9.30 மணி­ய­ள­வில் பற்றிய தீ பலத்த காற்றின் கார­ண­மாக 2,260 ஹெக்டர் பரப்­ப­ள­வில் இருந்த புல்வெளி, புதர்கள், மரங்கள் போன்ற­வற்­றில் மள­ம­ள­வெ­னப் பர­வி­யது. தீ மிகவும் கோர­மா­கப் பர­வி­ய­ தா­கக் கூறிய தீயணைப்­பா­ளர்­கள் முதலில் கட்­டுப்­படுத்த இயலாது என்று கூறினாலும் இரவு நேரத்­தில் சாத­க­மான சூழல் நில­வி­ய­தால் போராடித் தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வந்த­னர். ஹெலி­காப்­டர்கள் மூலம் தீயணைப்­புப் பொருட்­களைத் தூவி தீயின் தீவிரத்தை வீரர்­கள் தணித்த­னர். காட்டுத் தீயால் ஒருவர் மோச­மா­கக் காய­முற்­றார். மழைப்­பொ­ழிவு குறைந்து தென்­கிழக்கு பிரான்­சில் வறண்ட காலநிலை நில­வு­வ­தால் தீப்­பற்­றி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

தீ கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டா­லும் முற்­றி­லு­மாக அணைக்­ கப்­ப­ட­வில்லை என மார்­சீ­லின் மேயர் டுவிட்­ட­ரில் குறிப்பிட்­டார். இதற்­கிடையே, ஹெரால்ட் பகு­தி­யில் நேர்ந்த மற்றொரு தீச்­சம்ப­வத்­தில் தீயணைப்பு வாக ­னத்தை தீ சுற்றி வளைத்­த­தால் அதில் இருந்த நான்கு தீயணைப்­பா­ளர்­கள் காய­முற்­ற­தா­கக் கூறப் ­பட்­டது. தீச்­சம்ப­வம் கார­ண­மாக மார்சீல் பகு­தி­யில் சாலை, வான்வழிப் போக்­கு­வ­ரத்து வெகுவாக பாதிக்­கப்­பட்­டது. மார்சீல் விமான நிலையத்தில் இரண்டு விமானச் சேவைகள் ரத்துசெய்­யப்­பட்­டன.

தெற்கு பிரான்சில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. படம்: ஏஎஃப்பி