வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வரும் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு அதிகரித் துள்ளது. அவரது பிரசாரத்திற்கு உதவுவதை நிறுத்துமாறு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர் அக்கட்சியின் தேசியக் குழுத் தலைவரை கேட்டுக்கொண்டுள் ளனர்.
70க்கும் மேற்பட்ட அக்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை குழுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். டிரம்பின் கவனக்குறைவு மற்றும் திறமை யின்மை போன்றவற்றால் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்றும் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி அடைய அது வழிவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

