பிணைப்பிடித்து வைத்திருந்த ஒருவன் சுட்டுக்கொலை

பிணைப்பிடித்து வைத்திருந்த ஒருவன் சுட்டுக்கொலை

1 mins read

கோலாலம்பூர்: ஒரு கடையின் உரிமையாளரை பிணைப்பிடித்து வைத்திருந்த ஒருவனை ஜோகூர் போலிசார் சுட்டுக் கொன்றனர். ஆயர் ஹித்தாமில் வியாழக்கிழமை இரவு ஒரு கடைக்குள் நுழைந்த ஒருவன் அக்கடை உரிமையாளரான 53 வயது மாதினை பிணைப்பிடித்து வைத்திருந்ததாக போலிசார் கூறினர். அந்த மாதிடம் அவன் 300,000 ரிங்கிட் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்பட்டது. அவன் கேட்ட பணத்தை அந்த மாதின் உறவினர் கொடுத்த போதும் அவன் அந்த மாதை விடுவிக்கவில்லை. அந்த மாதை அவன் சுடமுயன்றபோது போலிசார் அதிரடியாக உள்ளே நுழைந்து அவனை சுட்டுக் கொன்றதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அவன் இரு துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் போலிசார் கூறினர்.