பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாக 6 பேர் மீது குற்றச்சாட்டு

பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாக 6 பேர் மீது குற்றச்சாட்டு

1 mins read
09ba7cc8-42e8-41ed-adcc-ea3574f90076
-

கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாக ஒரு மாது உள்பட 6 பேர் மீது மலேசியாவில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. மலேசியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாவலர், ஓர் இளைஞர், ஒரு டாக்சி ஓட்டுநர் அவர்களுள் அடங்குவர்.

அந்த 6 பேர் மீது ஈப்போவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. பயங்கரவாதத்தை துடைத்தொழிக்கவும் பயங்கரவாதச் செயல்களை முறியடிக்கவும் மலேசிய போலிசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது சந்தேகப் பேர்வழிகள் பலரை போலிசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவர். படம்: தி ஸ்டார்