காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டு வீசித் தாக்கியதில் ஐஎஸ் குழுவின் தலைவர் ஹஃபிஸ் சயீத் கான் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சயீத் கான் சென்ற ஆண்டு ஆப்கானின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆப்கான் உளவுத் துறை முன்பு அறிவித்திருந்தது. ஆனால் அத்தாக்குதலில் சயீத் கான் உயிர் தப்பியதாக ஐஎஸ் குழு கூறி வந்தது. இந்நிலையில் நன்கர்ஹார் பகுதியில் கடந்த ஜூலை 26ஆம் தேதி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் சயீத் கான் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சயீத் கான் கொல்லப்பட்டது ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுக்கு பலத்த பின்னடைவு என்று கருதப்படுகிறது.
ஆப்கானில் ஐஎஸ் தலைவர் அமெரிக்கத் தாக்குதலில் பலி
1 mins read

