பேங்காக்: தாய்லாந்தின் பல இடங்களில் தொடர்ச்சியாக அடுத் தடுத்து குண்டுகள் வெடித்தது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டு வெடித்த இடத்தில் மரபணு மாதிரிகளை போலிசார் சேகரித்து வருவதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே 'சிவப்பு சட்டை' இயக்கத்தின் உறுப்பினர்கள் 6 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக அந்த இயக்கத்தின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான வர்களை போலிசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில் சுற்றுலாத் தலமான ஹுவா ஹின் நகரில் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவ் விருவரையும் போலிசார் கைது செய்திருப்பதாக உள்ளூர் ஊடகத் தகவல் தெரிவித்தது. மற்ற விவரங்கள் எதுவும் தெரிய வில்லை. ஹுவா ஹின் நகரின் முக்கிய இடமான மணிக்கூண்டு அருகே இரு குண்டுகள் வெடித்ததில் இருவர் கொல்லப் பட்டனர். மூன்று பேர் காயமடைந் தனர். புக்கெட் நகரிலும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது,
தாய்லாந்தை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் நால்வர் உயிரிழந்தனர். சுமார் 35 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 10 பேர் வெளிநாட்டினர். இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்க வில்லை. இத்தாக்குதல்கள் பயங்கரவாதத் தொடர்புடையது அல்ல என்றும் வெளிநாட்டினர் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் போலிசார் கூறினர். 2016-08-14 06:00:00 +0800

