மலேசிய மாநிலங்கள் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் அதிக இடர்ப்பாடுடனான தண்ணீர் பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்று கூறப்படுகிறது. அதிக மழைபொழியக் கூடிய தட்பவெப்ப மண்டலத்தில் மலே சியா அமைந்துள்ள போதிலும் தண்ணீர் பிரச்சினை தவிர்க்கமுடி யாத ஒன்று என்றும் தெரிவிக் கப்படுகிறது. அடுத்த நான்காண்டுகளில் மலேசியாவின் கெடா, பினாங்கு, கிளந்தான், பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங் களின் நீரழுத்த நிலை 1.4 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக வளங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் எந்த அளவுக்கு நாட்டின் நீரழுத்த நிலையைப் பாதிக்கும் என்பதை இந்த முன்னுரைக்கப்பட்ட மாற் றம் உணர்த்துகிறது.
உலகக் கரியமில வாயு வெளியேற்றத்தைப் பிரதிபலிக்கும் வழக்கமான நிலவரத்தின் அடிப் படையில் கணக்கீடு செய்யப்பட்ட தாக நிறுவனம் குறிப்பிட்டது. இந்த மாநிலங்கள் அடைந்து வரும் வளர்ச்சியும் வளர்ந்து வரும் மக்கள்தொகையும் தண் ணீருக்கான தேவையை அதிகப் படுத்தி உள்ளதாக மலேசியாவின் தண்ணீர், எரிசக்தி ஆய்வுச் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் தெரிவித்து உள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது போதுமான தண்ணீர் இருப் பதாகத் தோன்றும். ஆனால், சில ஆறுகள் மாசுபடுத்தப்படுவதால் இடர்ப்பாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

