நியூயார்க்கில் இமாம் ஒருவரும் அவரது உதவியாளரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்க நேரப்படி சனிக் கிழமை பட்டப்பகலில் இச்சம்ப வம் நிகழ்ந்துள்ளது. பங்ளாதேஷியர் அதிகம் வசிக் கும் பகுதியான ஓசோன் பார்க் என்னும் இடத்தில் பள்ளிவாசல் தொழுகைக்குப் பின்னர் இந்தப் படுகொலைகள் நடந்ததாக அதிகாரிகள் கூறினர். கொல்லப்பட்ட இருவரும் தலையில் சுடப்பட்டனர். மேலும், மாவுலாமா அகோன்ஜீ என்னும் பெயர் கொண்ட இமாம் அவர் தொழுகையை வழிநடத்தும் பள்ளி வாசலுக்கு அருகிலேயே சுடப் பட்டு இருப்பது -குறிப்பிடத்தக்கது.
அவருக்கு வயது 55 என்னும் தாரா உடின் என்னும் அவரது உதவியாளரின் வயது 64 என் னும் போலிஸ் தெரிவித்தது. நடந்து சென்ற அந்த இரு வரைப் பின்தொடர்ந்த சந்தேக நபர் ஒருவர் இருவரையும் துப் பாக்கியால் சுட்ட பின்னர் அங் கிருந்து ஓடியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித் தனர். சுடப்பட்டதும் அவ்விருவரும் ஜமைக்கா மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப் பட்டனர். இருப்பினும் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல்வேறு நாடுகளில் நிகழ்த் தப்பட்டு வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக நியூயார்க் சம்ப வம் நிகழ்ந்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் எனக் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துவரும் வேளையில் இந்தப் படுகொலை கள் நிகழ்ந்துள்ளன.
படுகொலைகள் நிகழ்ந்த இடத்தில் விசாரணை நடத்தும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

