பிலிப்பீன்சில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

பிலிப்பீன்சில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

1 mins read
2b106920-3d11-496f-be70-61a5567a9f17
-

மணிலா: பிலிப்பீன்சில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிலா உள்ளிட்ட பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையிலும் வெள்ளப்பெருக்கிலும் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக் கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பள்ளிக் கூடங்களில் தங்கியுள்ளனர். வரும் நாட்களிலும் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்திருப்பதால் இன்னும் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் படுவர் என்று தெரிகிறது.

மணிலாவில் வெள்ளநீர் தேங்கியுள்ள சாலையைக் கடக்க மக்கள் சிரமப்படுகின்றனர். படம்: ஏஎஃப்பி