பேங்காக்: தாய்லாந்தின் பிரபல கடற்கரை உல்லாசத் தளங்களில் சென்ற வாரம் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இவை அந்நாட்டில் ராணுவ ஆட்சி மன்றம் வகுத்த நகல் அரசமைப்புச் சட்டத்தை ஏற்பது என பொதுமக்கள் வாக்களித்த சில நாட்கள் கழித்து நிகழ்ந்தன. இந்நிலையில், இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பான விசார ணையில் பலர் கைது செய்யப் பட்டிருப்பதாக தாய்லாந்து ராணு வம் நேற்று அறிவித்தது. இந்த குண்டு வெடிப்புகளுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
அத்துடன், இந்தச் சம்பவங்களில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கூறப் படுவதை அந்நாட்டு போலிசும் ராணுவமும் நிராகரித்துள்ளன. இதனால், உள்ளூர் பிரச்சினை தொடர்பாகவே இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன என போலிசும் ராணுவ மும் நம்புவதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது. இதில் அரசமைப்புச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு முடிவு களில் அதிருப்தியுற்றோர் மீது சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அப்படி இல்லையெனில் தாய் லாந்தில் முஸ்லிம் சமயத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக் கும் தென் மாநிலங்களிலுள்ள கிளர்ச்சியாளர்கள் இவற்றை நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனை வரும் ராணுவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். "குண்டு வெடிப்பு சம்பவங்க ளைத் தொடர்ந்து ராணுவம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன் படுத்தி பயனுள்ள தகவல் தர முடியும் எனக் கருதும் அனை வரையும் விசாரணைக்கு அழைத் துச் சென்றுள்ளது," என ராணுவப் பேச்சாளர் ஒருவர் விளக்கினார்.

