அமெரிக்காவின் நியூயார்க் நகரி லுள்ள ஜான் கென்னடி விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்ற தகவலால் ஞாயிறன்று அங்கு பயணிகளி டையே பீதி நிலவியது. ஆனால், இதன் தொடர்பில் பயணிகள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட்டபின் முனையம் எண் எட்டில் மேற்கொள்ளப்பட்ட சோத னையில் துப்பாக்கிச்சூடு நடந்த தற்கான எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை. "அந்த முனையத்தில் இருந்த வர்கள் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட னர்.
"இதன் தொடர்பில் பயணிகள் தங்கள் விமானச் சேவை நிறு வனங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்," என அந்த விமான நிலையத்தை நடத்தும் முகவை தெரிவித்தது. விமான நிலையத்தின் எட்டாம் எண் முனையத்தைப் பயன்படுத் தும் விமானச் சேவை நிறுவனங் களின் பயணிகள் அந்த முனை யத்திலிருந்து வெளியேறுவதை காண முடிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
நியூயார்க் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடந்ததாகப் பரவிய தகவலால் அங்கு எட்டாம் எண் முனையத்தில் இருந்த பயணிகள் பீதியில் தரையில் சாய்கின்றனர். இதைத் தொடர்ந்து விமான நிலையத்திலுள்ள இரண்டு முனையங்களிலிருந்து பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். படம்: ஏஎஃப்பி

