துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் மில்வாக்கியில் அமைதி

துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் மில்வாக்கியில் அமைதி

1 mins read
a939b898-dc2a-4e1d-af0a-ecd801732953
-

மில்வாக்கி: அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் சனிக்கிழமை யன்று சில்வில் ஸ்மித் என்ற ஆடவரை போலிசார் சுட்டுக் கொன்றபின் அங்கு கலவரம் வெடித்ததுடன் தீவைப்பு சம்பவங் களும் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து அங்கு அமைதியை நிலைநாட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய காவற்படையை பணியில் ஈடுபடுத்தினார் விஸ்கான்சின் மாநில ஆளுநர் ஸ்காட் வார்க்கர். இந்த விவகாரத்தில் சமூகத்தை அமைதிப்படுத்தவும் போலிசார் நியாயமான முறையில் நடந்து கொண்டனர் என்பதைப் புரிய வைக்கவும் போலிஸ் தலைவர் எட்வர்ட் ஃபிளின் தாம் போலிஸ் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவியில் பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சியை கண்டதாகவும் அதில் ஸ்மித் அந்த போலிஸ் அதிகாரியை நோக்கி கையில் துப்பாக்கியுடன் திரும்பியதாகவும் விளக்கினார்.

முன்னதாக, மில்வாக்கியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வும் அங்கு ஆறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் கறுப்பின ஆடவர் ஒருவரை போலிசார் சனிக்கிழமையன்று சுட்டுக் கொன்றபின் அங்கு வன்முறை வெடித்தது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தெருக்களில் இறங்கி இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதில் கழுத்தில் துப்பாக்கிச்சூடு காயத்துடன் ஒருவரை போலிசார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை படத்தில் காணலாம். படம்: ஏஎஃப்பி