சோல்: பிரிட்டனில் உள்ள வடகொரிய துணைத் தூதர் தன் மனைவி மற்றும் மகனுடன் 'மூன்றாவது நாட்டில்' அடைக்கலம் நாடி யிருப்பதாக தென்கொரிய பத்திரிகை செய்தி தெரிவித்தது. லண்டனில் உள்ள வடகொரிய தூதரகத்தில் பணியாற்றிய தயி யோங் ஹோ என்பவர் மூன்றாம் நாட்டில் அடைக்கலம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்றாவது நாடு என்பது பிரிட்டனா அல்லது வேறு நாடா என்பதை அந்தப் பத்திரிகை குறிப் பிடவில்லை. இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் வேறு ஒரு நாட்டில் அடைக்கலம் நாடியுள்ள வடகொரிய முதல் உயர் அதிகாரி இவர் ஆவார். இதற்கு முன்பு வடகொரியாவைச் சேர்ந்த சிலர் தென் கொரியாவில் அடைக்கலம் நாடினர்.
வெளிநாட்டில் தஞ்சம் கோரும் வடகொரிய துணைத் தூதர்
1 mins read

