கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; 82,000 பேர் வெளியேற்றம்

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; 82,000 பேர் வெளியேற்றம்

1 mins read
0172a786-b1a4-4967-b52a-5d2ca187258e
-

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவுவதால் சுமார் 82,000 பேர் வெளியேற்றப் பட்டதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள சான் பெர்னார்டினோ நகருக்கு அருகே காட்டுத் தீ பரவுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. வீசும் பலத்த காற்றினால் தீ வேகமாகப் பரவுவதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

காட்டுத் தீயை அணைப்பதில் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி