டமாஸ்கஸ்: கடந்த ஐந்து ஆண்டுகளில் சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18,000 பேர் உயிரிழந்த தாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் அடித்தல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல சித்ரவதைகளை கைதிகள் அனுபவித்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தகைய துன்புறுத்தலுக்கு உள்ளான கைதிகள் 65 பேரை விசாரித்ததில் அவர்கள் கொடுத்த வாக்குமூல சாட்சியங்கள் அடிப்படையில் இந்தத் தகவலை அம்னெஸ்டி அமைப்பு வெளியிட் டுள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகள் உயிரிழந்ததை தாங்கள் நேரில் பார்த்ததாகவும் சிலர் அடித்தே கொல்லப்பட்டதாகவும் சித்திரவதை செய்யப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.

