கழிவறை தொட்டிக்குள் பாம்பு; அதிர்ச்சி அடைந்த மாது

கழிவறை தொட்டிக்குள் பாம்பு; அதிர்ச்சி அடைந்த மாது

1 mins read
e06e68d3-0527-4ebe-81bb-2390f9e37e48
-

கோலாலம்பூர்: மலேசிய மாது ஒருவர் கழிவறைத் தொட்டிக்குள் ஒரு பெரிய பாம்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பத்திரிகைத் தகவல் தெரிவித் தது. சுமார் 40 வயதான கமாருனிசா முகம்மது காசிம் என்ற மாது, கழிவறைக்குள் நுழைந்தபோது கழிவறைத் தொட்டிக்குள் ஒரு பெரிய பாம்பைப் பார்த்ததும் கூச்சல் போட்டதைத் தொடர்ந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது சகோதரர் ரவிடீன் முகம்மது காசிம் அங்கு ஓடி வந்திருக்கிறார்.

உடனடியாக ஒரு நீளமான கம்பைப் பயன்படுத்தி அந்த கழிவறைத் தொட்டியை மூடி விட்டு அதன் மீது ஒரு பெரிய வாளியை வைத்து விட்டதாகவும் ரவிடீன் கூறினார். பின்னர் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புக் குழு வினருக்குத் தகவல் தெரிவித்த தாகவும் அவர் சொன்னார். திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் தகவல் கிடைத் ததும் அவ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக் குழுவைச் சேர்ந்த ஐவர் அந்தப் பாம்பைப் பிடித்ததாகவும் அதைப் பிடிக்க அவர்களுக்கு 25 நிமிடங்கள் பிடித்ததாகவும் ரவிடீன் கூறினார்.

கழிவறைத் தொட்டிக்குள் ஒரு பாம்பைப் பார்த்து மலேசிய மாது ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். படம்: உத்துசான் மலேசியா