இந்தோனீசியக் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த வெளிநாட்டுப் படகுகளை இந்தோனீசியா கடலில் மூழ்கடித்து வருகிறது. இந்தோனீசியா அதன் சுதந்திர தினத்தை புதன்கிழமை கொண்டாடியது. கடல்துறை அரசுரிமையை பாதுகாப்பதில் இந்தோனீசியா உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் படகுகளை மூழ்கடித்தது. நட்டுனா கடல் பகுதி உள்ளிட்ட 8 இடங்களில் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. படம்: ஏஎஃப்பி
இந்தோனீசியா மூழ்கடித்த சட்டவிரோத மீன்பிடிப் படகுகள்
1 mins read
-

