பிரேசில் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதித்த ஸிக்கா கிருமி அமெரிக்காவின் மயாமி கடற்கரைப் பகுதியில் பரவி வருவதாக வெளியான தகவல் அமெரிக்க மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொசுக் கடியால் பரவும் ஸிக்கா நோய்த்தொற்று, பிரேசில் நாட்டில் உருவாகி உலகில் உள்ள 50-க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மயாமி கடற்கரை பகுதியில் அக்கிருமி பரவி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 17ஆம் தேதி நிலவரப்படி ஸிக்கா கிருமி தொற்றிய 33 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அமெரிக்காவின் எழில்மிகு கடற்கரை நகரமான மயாமி ஏராளமானோருக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இந்நிலையில் இக்கிருமி பற்றிய அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளதால் அந்நகருக்கு வருவோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை அச்சுறுத்தும் ஸிக்கா கிருமி
1 mins read

