கோலாலம்பூர்: காட்டுத் தீயை அணைக்க இந்தோனீசியா துரித நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும் மலேசியாவில் திரும்ப வும் புகைமூட்டப் பிரச்சினை வந்து விட்டதாக மலேசிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். மலேசியாவில் சில நகரங்களில் காற்றின் தூய்மைக்கேடு அளவு மிதமான அளவில் பதிவாகியுள்ள நிலையில் மலேசியாவை மீண்டும் புகைமூட்டம் பாதிக்கத் தொடங்கி விட்டது என்று இயற்கை வள மற்றும் சுற்றுப்புற அமைச்சர் வான் ஜூனைய்டி துங்கு ஜஃபார் கூறினார். இந்தோனீசியாவில் சுமத்ரா விலும் கலிமந்தானிலும் காட்டுத் தீ பரவி வருவதால் கடந்த ஒரு வார காலமாக புகை மூட்டம் மலேசியாவை பாதிக்கத் தொடங்கி யிருப்பதாக அவர் சொன்னார். இந்தோனீசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க இந்தோனீசியா துரிதமாக நட வடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் புகைமூட்டப் பிரச்சினை நீடிப்பதாக வான் ஜூனைய்டி கூறினார். "புகைமூட்டப் பிரச்சினை மோசமான நிலையை எட்ட வில்லை.
இருப்பினும் மலேசியாவில் திரும்பவும் புகைமூட்டம் வந்துவிட்டது என்பதை தெரியப் படுத்த இந்தோனீசிய வனத்துறை மற்றும் சுற்றுப்புற அமைச்சர் சிட்டி நூர்பாயா பாக்கருக்கு கடிதம் எழுத உள்ளேன்," என்று ஜூனைய்டி கூறினார். புகைமூட்டப் பிரச்சினை மலேசியாவுக்கு திரும்பவும் வந்து விட்டது என்பதை இந்தோனீ சியாவுக்கு தாங்கள் தெரியப்படுத்த விரும்புவதாகவும் அவர் சொன் னார். செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

