சிரியாவில் உள்நாட்டுப் போர் நீடிக்கும் வேளையில் போராளிகள் வசம் உள்ள அலெப்போ நகரம் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. அரசாங்கப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் அந்நகரில் உள்ள பல கட்டடங்கள் தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் தலையிலிருந்து ரத்தம் வடிந்த நிலையிலும் உடல் முழுவதும் தூசி படிந்த நிலையிலும் ஆம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் வீடியோ பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்
சிரியாவில் அலெப்போ நகரில் தரைமட்டமான கட்டடங்கள்
1 mins read
-

