ஈராக்கில் உள்ள ஐஎஸ் போராளிகளை எதிர்த்து ஈராக்கியப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வந்த போதிலும் அங்கு இன்னமும் பல நகரங்கள் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஐஎஸ் போராளிகளிடமிருந்து தப்பிக்க ஏராளமான மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனர். இவர்கள் ஈராக்கியப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிர்குக் நகருக்கு வந்துசேர்கின்றனர். ஐஎஸ் போராளிகளை ஒடுக்க ஈராக்கியப் படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ்
ஐஎஸ் வசம் உள்ள பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் மக்கள்
1 mins read
-

