மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பல பில்லியன் டா லரை மோசடி செய்தது தொடர்பான விசாரணையில் உள்ள முக் கிய நபரை அபுதாபி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக வால் ஸ்திரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. காதிம் அல் குவாபைஸி என்னும் அவர் மோசடி, ஊழல் தொடர்பிலான விசாரணை தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாகவும் அது தெரி வித்தது. அந்த விசாரணையில் மலேசி யாவின் 1எம்டிபி விவகாரத்தில் அவருக்கு உள்ள பங்கும் அடங் கும் என்று அந்த சஞ்சிகை குறிப்பிட்டது. இருப்பினும் காதி முக்கு எதிராக குற்றச்சாட்டு கள் எதுவும் பதிவு செய்யப்பட வில்லை என்றும் அது தெரி வித்தது. ஐக்கிய அரபு சிற்றரசுகளை விட்டு அவர் வெளியேறக்கூடாது என்றும் அவரது சொத்துகள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் கடந்த ஏப்ரலில் அந்த சஞ்சிகை குறிப்பிட்டது. கைது விவகாரம் தொடர்பாக காதிமின் வழக் கறிஞர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மோசடிகள் மூலம் ஈட்டப்பட் டதாக சந்தேகிக்கப்படும் நிதி தொடர்பான காதிமின் நட வடிக்கைகளை விசாரிக்கும் வண்ணம் அமெரிக்கா தனது புலன் விசாரணையை விரிவு படுத்தி உள்ளதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது. 1எம்டிபி மூலம் வந்த பணத்திலிருந்து அமெரிக்காவில் வாங்கியதாக நம்பப்படும் 134 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை முடக்க கடந்த மாதம் அமெரிக்க நீதித் துறை சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

