நஜிப்: யாரும் வரம்பு மீற வேண்டாம்

நஜிப்: யாரும் வரம்பு மீற வேண்டாம்

1 mins read
919dc84a-38ff-4094-ae8f-8d6581876dd9
-

கோலாலம்பூர்: மலேசியாவில் மிகப் பெரிய அரசியல் கட்சியான அம்னோவைப் பற்றி குறை கூறுபவர்கள் யாராக இருந்தாலும் வரம்பு மீற வேண்டாம் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் எச்சரித்துள்ளார். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் வரம்பு மீற வேண்டாம் என்றும் அவ்வாறு வரம்பு மீறுவது இஸ்லாத்துக்கு புறம்பானது என்றும் திரு நஜிப் கூறியுள்ளார். அம்னோ கட்சியின் தலைவர் என்ற முறையில் தம்மைப் பற்றி குறை கூறினால் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறிய நஜிப், அவ்வாறு கூறப்படும் குறைகள் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாகக் கூறினார்.

அம்னோ கட்சியை வீழ்த்த திரு மகாதீர் முயற்சி செய்வதாகவும் திரு நஜிப் கூறினார். தலைமைத்துவத்தைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னைக் குறை கூறுவதும் மற்றொரு அரசியல் கட்சியை ஏற்படுத்துவதன் மூலம் அம்னோவை அழிக்க முயற்சி செய்வதும் மிகையான ஒன்று என்று திரு நஜிப் குறிப்பிட்டார்.