பிலிப்பீன்ஸ் அதிபர் மிரட்டல்: ஐநாவிலிருந்து விலகுவேன்

பிலிப்பீன்ஸ் அதிபர் மிரட்டல்: ஐநாவிலிருந்து விலகுவேன்

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, ஐநாவிலிருந்து விலகுவேன் என்று- மிரட்டியிருக்கிறார். போதைப் பொருளுக்கு எதிரானப் போரில் பலர் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும் என்று ஐநா உத்தர விட்டதைத் தொடர்ந்து அதிபர் டுட்டர்டேயின் மிரட்டல் வெளியாகியிருக்கிறது. போதைப்பொருட்களை துடைத்தொழிப்பேன் என்று வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற டுட்டர்டே அதிபர் பொறுப்பு ஏற்றதிலிருந்து போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

கடந்த மே 9ஆம் தேதி அவர் பதவி ஏற்றதிலிருந்து 900 பேர் போதைப் பொருளைக் கடத்திய சந்தேகத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை சுட்டிக்காட்டிய ஐநாவின் மனித உரிமை அமைப்பு, நீதிமன்ற விசாரணையின்றி கொல்லப்படும் சம்பவங்களை நிறுத்த வேண்டும் என்று கூறியது. இந்த நிலையில் ஐநாவையும் அதன் உறுப்பினர்களையும் தாக்கிப் பேசிய டுட்டர்டே, ஐநாவிலிருந்து விலகப்போவதாக எச்சரித்துள்ளார்.