டென்பசார்: இந்தோனீசியாவின் பாலித் தீவில் காவலர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரிட்டன் நாட்டவருடன் ஆஸ்திரேலியப் பெண் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த புதன் கிழமை அன்று கடற்கரையில் போக்குவரத்து காவலர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். அவரது தலை முதல் கழுத்து வரை காயங்கள் காணப்பட்டன. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரே லியாவின் சாரா கோனர், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் டைய்லர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கோனரும் டேவிட் டைய்லரும் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப் பட்டுள்ளதாக கோனரின் வழக்கறிஞர் கூறினார். குற்றச்செயல் நடைபெற்ற இடத்தில் கோனரின் ஏடிஎம் அட்டையும் ஓட்டுநர் உரிம அட்டையும் கண்டுபிடிக்கப் பட்டதால் அவர் மீது காவல்துறையின் சந்தேகக் கண் படிந்துள்ளது.

