துருக்கி திருமண நிகழ்ச்சியில் தாக்குதல்; பலர் மரணம்

துருக்கி திருமண நிகழ்ச்சியில் தாக்குதல்; பலர் மரணம்

2 mins read
aa1eb153-1171-4776-bc64-3d53d56087a9
-

அங்காரா: துருக்கியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற் கொலைத் தாக்குதல் நடத்தப் பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் ஏராள மானோர் காயம் அடைந்தனர். சிரியாவை எல்லையாகக் கொண்ட துருக்கியின் காஸியான் டெப்பில் சனிக்கிழமை அன்று தாக்குதல் நடைபெற்றது. தற்கொலையாளி ஒருவன் வெடிகுண்டுகளுடன் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண் டதாக நம்பப்படுகிறது. இதனால் ஐஎஸ் அமைப்பினர் இந்தத் தாக்கு தலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காஸியான்டெப் ஆளுநர் அலி யெர்லிகாயா, 30 பேர் வரை கொல்லப்பட்டனர் என்றும் 90 பேர் வரை காயம் அடைந்தனர் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார். திருமண நிகழ்ச்சியில் பங் கேற்ற பலர் கும்பலாக சாலையில் குழுமியிருந்தபோது குண்டு வெடித்தது என்று பாதுகாப்பு துறையின் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்தப்பகுதியில் குர் தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து சேர்ந்ததையும் காவல்துறை யினரும் அவசரகால சேவை ஊழி யர்களும் துரித கதியில் இயங்கு வதையும் தொலைக்காட்சி ஒளி பரப்புகள் காட்டின. சாலையில் ஒரு பக்கம் வரிசையாக சடலங்கள் கிடத்தப் பட்ட நிலையில் உறவினர்கள் கதறி அழுவதையும் காண முடிந்தது. துருக்கி அதிபர் எர்டோகன், "எங்கள் நாடு தாக்குதல் நடத் தியவர்களுக்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் தெரிவிக்க விரும்புகிறது," என்றார். 'உங்களால் வெற்றி பெற முடியாது' என்பதே அந்தச் செய்தி என்று அவர் குறிப்பிட்டார்.

உறவினர்கள் சேர்க்கப்பட்ட மருத்துவமனை முன்பு காத்திருந்த பெண்கள். படம்: ராய்ட்டர்ஸ்