தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் சக்திவாய்ந்த சூறாவளிக் காற்று வீசுவதுடன் கனமழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சுமார் 400 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித் தனர். கனமழையால் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்றால் ஏற்பட்ட சேதம் விவரம் உடனடியாகத் தெரியவில்லை. ஜப்பானில் வீசும் பயங்கர புயல் காற்றின் காரணமாக 145 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது. இது 26,910 பயணிகளை பாதிக்கிறது.
நிப்பன் ஏர்வேஸ் நிறுவனமும் 96 உள்ளூர் விமானச் சேவை களை ரத்து செய்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து தோக் கியோ செல்லும் விமானங்களின் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதம் அடைந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும் தோக்கியோவில் முக்கிய ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.