பாத்தாம்: பாத்தாமிலிருந்து ஒலிபரப்பாகும் 'ரேடியோ ஹாங்' எனும் வானொலி, தீவிரவாத கருத்துகள் அடங்கிய சமய போதனைகளை ஒலிபரப்பி வருவ தாக சிங்கப்பூர் மற்றும் இந்தோனீ சியாவில் உள்ள அதிகாரிகள் கூறும் குற்றச்சாட்டுகளை அந்த வானொலி நிலையத்தின் நிறுவனர் மறுத்துள்ளார். அத்தகைய பிரசாரங்களை அந்த வானொலி கடந்த காலங்களில் ஒலிபரப்பியதை அந்த வானொலி நிலையத்தின் ஆணையர் செய்ன் அலடாஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் 2009ஆம் ஆண்டு 'ரேடியோ ஹாங்' அதன் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை மறு ஆய்வு செய்த பின்னர் அத்தகைய தீவிரவாத பிரசாரம் எதுவும் ஒலிபரப்பப்படவில்லை என்று அவர் கூறினார். சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்வதற்காக அங்கு செல்ல நோக்கம் கொண்டிருந்த இருவர் சிங்கப்பூரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிங்கப்பூரர் களான ரோஸ்லி பின் ஹம்சா, முகம்மது ஓமர் பின் மஹாடி ஆகிய இருவரும் பல ஆண்டு களுக்கு முன்பே 'ரேடியோ ஹாங்' ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை கேட்கத் தொடங்கியதாக சிங்கப்பூர் கூறியுள்ளது. தீவிரவாத சமய கருத்துகளை போதனை செய்வோரைப் பற்றிய செய்திகளையும் அந்த வானொலி ஒலிபரப்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சமய பிரசாரங் கள் மட்டுமே ஒலிபரப்பப்பட்ட தாகவும் ஐஎஸ் போதனைகளை ஒலிபரப்பவில்லை என்றும் 'ரேடியோ ஹாங்' நிலையத்தின் நிர்வாகி அபு யூசஃப் கூறியுள்ளார்.

