சுமத்ரா தீயை அணைக்க மலேசியா உதவத் தயார்

சுமத்ரா தீயை அணைக்க மலேசியா உதவத் தயார்

2 mins read

கோலாலம்பூர்: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் பரவும் காட்டுத் தீயை அணைக்க உதவத் தயாராக இருப்பதாக மலேசியா தெரிவித் துள்ளது. காட்டுத் தீயை அணைக்க தண்ணீர் குண்டுகளைப் பயன் படுத்தும் ஒரு விமானத்தை சுமத்ரா தீவுக்கு அனுப்ப தாங்கள் ஆயத்தமாகி வருவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் ஷஹிடன் காசிம் கூறியதாக மலாய் மெயில் இணையப்பக்கத் தகவல் தெரி வித்தது. சுமத்ராவில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீயை அணைக்க சென்ற ஆண்டும் மலேசியா அந்த விமானத்தை அங்கு அனுப்பி யிருந்ததாக ஷஹிடன் காசிம் கூறினார். அந்த விமானம் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்த முடியும் என்பதால் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அந்த விமானம் உதவியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார். ஆசியாவில் அத்தகைய விமானத்தைப் பெற்றுள்ள ஒரே நாடு மலேசியா என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே அந்த விமானத்தை சுமத்ராவுக்கு அனுப்புவதற்கு மலேசியா தயாராக இருப்பதாகவும் இந்தோனீசியா கேட்டுக் கொண் டால் உடனடியாக அந்த விமானத்தை அங்கு அனுப்ப இருப்பதாகவும் அவர் சொன்னார். சுமத்ரா மற்றும் கலிமந்தான் தீவுகளில் பல இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க இந்தோனீசியா துரித நட வடிக்கைகளை எடுத்த போதிலும் புகைமூட்டப் பாதிப்பு மலேசியாவில் மீண்டும் வந்துவிட்டது என்று சென்ற வாரம் மலேசிய இயற்கை வள மற்றும் சுற்றுப்புற அமைச்சர் வான் ஜூனைய்டி துங்கு ஜஃபார் கூறியிருந்தார். புகைமூட்டம் ஆபத்தான நிலையை எட்டவில்லை என்ற போதிலும் இதுகுறித்து இந்தோனீ சியா அதிகாரிகளுக்கு தான் கடிதம் எழுதவிருப்பதாக அவர் அப்போது கூறினார். இந்தோனீ சியாவில் பரவும் காட்டுத் தீயால் ஏற்படும் புகைமூட்டத்தால் இந் தோனீசியா மட்டுமன்றி சிங்கப் பூர், மலேசியா ஆகிய பக்கத்து நாடுகளும் ஆண்டுதோறும் பாதிக் கப்படுகின்றன.

புகைமூட்டத்தால் காற்றின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும் போது மக்களின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சுவாசக் கோளாறு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே புகைமூட்டப் பிரச் சினையை சமாளிக்க ஒருங் கிணைந்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆசியான் நாடுகள் அவ்வப்போது விவாதித்து வருகின்றன.