முகைதின்: எதிர்க்கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவோம்

முகைதின்: எதிர்க்கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவோம்

1 mins read

கோலாலம்பூர்: அடுத்து வரும் தேர்தலில் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து தாங்கள் பணியாற்ற விருப்பதாக மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் தெரிவித்துள்ளார். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் முகைதின் யாசினும் தொடங்கியுள்ள 'பார்ட்டி பிரிபூமி பெர்சத்து' எனும் புதிய கட்சி ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கப் பதிவகத்தில் முறையாக பதிவு செய்துகொள்ள மனுச் செய்துள்ள வேளையில் முகைதின் இவ்வாறு கூறினார். திரு மகாதீரும் ஜனநாயக செயல் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதில் தமக்கு பிரச்சினை எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார். புதிய கட்சியில் சேர ஆயிரக் கணக்கானோர் விரும்புவதாகவும் புதிய கட்சிக்கு சங்கப் பதிவகம் அனுமதி வழங்கினால் மட்டுமே உறுப்பினர்கள் அதில் சேர முடியும் என்றும் மகாதீர் கூறினார். அம்னோ கட்சியை அழிக்க சிலர் முயற்சி செய்வதை தம்மால் சகித்துக்கொள்ள முடியாது என்று மலேசிய பிரதமர் நஜிப் கூறிய சில நாட்களில் மகாதீர் புதிய கட்சிக்கான ஆதரவு பற்றிக் கூறியுள்ளார்.