ஜப்பான், தென்கொரியா, சீனா சந்திப்பு

ஜப்பான், தென்கொரியா, சீனா சந்திப்பு

1 mins read

தோக்கியோ: ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டோக்கியோவில் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் மூன்று நாடுகளுக்கு இடையே இருந்து வரும் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கி‌ஷிடா சீன, தென்கொரிய அமைச்சர்களான வாங் யி, யுன் பியுங்=செ ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை இரவு விருந்தளிப்பார். புதன்கிழமை முத்தரப்பு நாடுகளின் கூட்டம் நடைபெறும் என ஜப்பானிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது. சர்ச்சைக்குரிய தீவுகளில் மூன்றை தனியார் வசமிருந்து 2012 செப்டம்பர் மாதம் ஜப்பான் பெற்றுக்கொண்டதற்குப் பின்னர் இப்போதுதான் சீன வெளியுறவு அமைச்சர் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.