பிலிப்பீன்சில் துப்பாக்கிப் படையுடன் போதைப்பொருள் துடைத்தொழிப்பு நடவடிக்கை

பிலிப்பீன்சில் துப்பாக்கிப் படையுடன் போதைப்பொருள் துடைத்தொழிப்பு நடவடிக்கை

2 mins read
e7e6b1e2-3b89-4ae3-aacb-8513adbcf6df
-

மணிலா: பிலிப்பீன்சில் குற்றங் களைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியின் முதல் கட்டமாக போதைப்பொருள் புழக்கத்தைத் துடைத்தொழிக்கும் நடவடிக் கையை அந்நாடு கடுமையான வகையில் கையாளத் தொடங்கி யுள்ளது. போதைப் பொருள் வர்த் தகத்தில் ஈடுபடுவோர், போதைப் புழங்கிகள் மீது தெருக்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலிசார் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தினர். இப்போது "மரணப்படை" என்னும் படையும் அதனுடன் இணைந்து கொண் டுள்ளது.

அந்த மரணப் படையினர் எவ்வித அடையாள முத்திரையு மின்றி மக்களோடு மக்களாய் கலந்து மோட்டார் சைக்கிளில் தெருக்களில் உலா வருவார்கள். போதைப்பொருள் தடுப்புப் போலிசார் என அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் உலா வரும் இவர்கள் போதைப் புழங்கிகள், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கண்டால் சுட்டுத் தள்ளுவர். பிலிப்பீன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டட்டெர்டே கடந்த ஜூன் 30ஆம் தேதி பதவியேற்றார். அதிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 1,800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக அதிபர் டட்டெர்டே கூறியுள்ளார். அதிபரின் இந்த நடவடிக்கை தெருக்களில் நடமாடும் போதைப் பித்தர்களுக்கும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்­ளோருக்கும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நடவடிக்கை பெரிய அளவில் பலன் தந்துள்ள தாக கியுஸே„ன் என்ற பகுதியில் கிராமத் தலைவர் திரு மேனுவெல் கோ கூறியுள்ளார். கியுஸே„ன் நகரில் மட்டும் 90 விழுக்காடு குற்றங்கள் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

பிலிப்பீன்ஸ் அர சின் இந்த அச்சுறுத்தல் நடவடிக் கையால் 600,000க்கு மேற்பட்ட போதைப் புழங்கிகளை போலிசிடம் சரண் அடையச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சரண் அடைந்த பலருக்கு அவர்களின் வாழ்வில் புதிய மாற் றத்தை ஏற்படுத்த அறிவுரையும் ஆலோசனை­யும் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட­தாக அதிகாரிகள் கூறினர். போதைப் புழங்கி களை அந்தப் பழக்கத்திலிருந்து விடு விக்க அரசாங்கத்தால் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின் றன. அந்த பயிற்சி வகுப்புகளின் மூலம் அவர்கள் திருந்தி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கு கின்றனர் என்று கூறப்படுகிறது. மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து அதிபரின் இந்தக் கொள்கைக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அவரால் நாட்டில் கட்டொழுங்கைக் கொண்டு வர முடியும் என்று அவரது ஆதர வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ள ளனர்.