விழிப்புநிலையில் பாலி

விழிப்புநிலையில் பாலி

2 mins read
30ce5549-eb52-4f38-9904-556cd0b41f9d
-

டென்­ப­சார் (இந்­தோ­னீ­சியா): இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி­யில் உள்ள ஹாலிடே தீவில் தாக்­கு­தல் மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­டி­ருந்த­தாக தீவி­ர­வாதி ஒரு­வர் சந்­தே­கத்­தின் பேரில் கடந்த வாரம் சுமத்­ரா­வில் கைது செய்­யப்­பட்­டார். அதனை­யொட்டி இந்­தோ­னீ­சிய போலிஸ் பாலி­யில் பாது­காப்பை பலப்­படுத்­தி­யுள்­ளது. தீவி­ர­வாதி ஒரு­வ­னின் கைது நட­வ­டிக்கை, அவர் பாலி­யில் தாக்­கு­தல் நடத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்த தக­வல் ஆகி­ய­வற்றைத் தொடர்ந்து பாலி­யின் நுழை­வா­யில்­கள் அனைத்­­தி­லும் பாது­காப்பு பலப்­படுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்த மாகாண போலிஸ் உயர் அதி­காரி சுஜெங் பிரி­யண்டோ கூறினார். பாலி­யில் உள்ள சிறிய துறை­ மு­கங்கள் வாயி­லா­கக்­கூட தீவி­ர­­ வா­தி­கள் நுழை­யக்கூடும் என்­ப­தால் ஒன்றுவிடா­மல் அனைத்து நுழை­வா­யில்­களும் கண்­கா­ணிக்­கப்­படு­வ­தாக அந்த அதி­காரி தெரி­ வித்­தார். சந்­தே­கத்­தின் பேரில் சுமத்­ரா­வில் கைது­செய்­யப்­பட்ட தீவி­ர­வாதி உண்மை­யி­லேயே பாலி­யில் தாக்­கு­தல் நடத்­தத் திட்­ட­ மிட்­டி­ருந்தானா என்­பது பற்றி தீவிர விசா­ரணை மேற்­கொள்­ளப்­படு­வ­தாக பயங்க­ர­வா­தத் தடுப்­புப் போலி­சார் கூறினர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­கப்­ பேர்­வ­ழி­யின் வீட்­டில் மேற்­கொண்ட சோதனை­யின்­போது, ஏராளமான வெடி­ பொ­ருட்­களை போலிசார் கைப்­பற்­றி­னர். "சந்­தே­கப் பேர்­வ­ழி­யி­டம் நடத்­தப்­பட்ட விசா­ரணை­யில், அவன் பாலி­யில் தாக்­கு­தல் நடத்த திட்­ட­மி­ட்ட­தா­கக் கூறி­னான் என்று தேசிய போலிஸ் பேச்­சா­ளர் அகுல் ரியாண்டோ கூறினார். கடந்த 2002 ஆம் ஆண்டு பாலி­யின் உல்­லா­சத் தீவு ஒன்­றில் உள்­ளூர்த் தீவி­ர­வா­தி­க­ளால் நடத்­தப்­பட்ட வெடி­குண்­டுத் தாக்­கு­த­லில் 202 பேர் கொல்­லப்­பட்­ட­னர். அவர்­களில் அதி­க­மா­னோர் ஆஸ்­தி­ரே­லி ­யர்­கள். மத்­திய கிழக்­கி­லுள்ள ஈராக், சிரியா ஆகிய நாடு­களில் உள்ள ஐஎஸ்ஐ­எஸ் பயங்க­ர­வா­தக் குழு­வின் ஈர்ப்பு இந்­தோ­னீ­சி­யா­வில் அண்மைய காலத்­தில் தலை­தூக்­கி­யுள்ளது. க­டந்த ஜன­வரி மாதம் இந்­தோ­னீ­சி­யத் தலை­ ந­க­ர­மான ஜகார்த்­தா­வில் ஐஎஸ்ஐ­எஸ் தொடர்­பி­லான வெடி­குண்டு, துப்­பாக்­கிச் சூடு தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில் நால்­வர் கொல்­லப்­ பட்­ட­னர். இது தொடர்­பாக நடத்­தப்­பட்ட போலி­சா­ரின் தேடு­தல் வேட்டை­யில் தீவி­ர­வா­தி­கள் என்ற சந்­தே­கத்­தின்­பே­ரில் பலர் கைது­செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்ற­னர். இந்­நிலை­ யில் தீவி­ர­வா­தி­கள் எவ்­வ­ழி­யி­லும் பாலிக்­குள் நுழைந்து தாக்­கு­தல் செய­லில் ஈடு­ப­டக்­கூடும் என போலி­ஸ் பாது­காப்பைப் பலப்­படுத்­தி­யுள்­ளது.