பதினைந்து வயதுச் சிறுமியும் அவருடைய நண்பர்கள் சிலரும் ஃபேஸ்புக் தளத்தில் அனல் பறக்கும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அந்த வாக்குவாதம் பின்னர் வன்முறையில் முடிந்தது. இதனால் 56 வயது ஆடவர் ஒருவர் உயிரிழக்க நேர்ந்தது. மலேசியாவின் ஜாலான் குராவில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு இந்தச் சம்பவம் நடந் தது. இந்தச் சம்பவம் பற்றிக் கூறிய திருமதி ராஜேஸ்வரி, "அன்று நான் வேலையிடத்தில் இருந்த போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு சிறுமி, என்னை உடனடியாகப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். என்னால் 11.00 மணிக்குத்தான் வர முடியும்," என்று கூறி விட்டேன்.
"வேலை முடிந்து வீடு திரும் பிய போது வீட்டின் கீழ்த்தளத்தில் சிறுமிகள் சிலர் சுற்றித் திரிந்ததைப் பார்த்தேன். வீட்டை நெருங்கியபோது என்னிடம் ஓடி வந்த எனது மகள், சிறுமிகள் சிலர் இங்கு வந்து அவளைத் திட்டியதாகவும் அவளுக்குப் பயமாக இருப்பதாகவும் கூறி அழுதாள்," என்றார் திருமதி ராஜேஸ்வரி. தன்னுடன் தங்கியிருந்த தனது உறவினர் திரு பஞ்ச வர்ணத்தை உதவிக்கு அழைத் துக் கொண்டு கீழ்த்தளத்தில் சுற்றித்திரிந்த அந்தச் சிறுமி களைப் பார்க்கச் சென்றார். தனது மகள் ஃபேஸ்புக் தளத்தில் அந்தச் சிறுமிகளைப் பற்றி ஏதோ தரக்குறைவாக எழுதியிருந்ததாகவும் அதற்கு அவள் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தன்னிடம் அந்தச் சிறுமிகள் கேட்டதாக திருமதி ராஜேஸ்வரி சொன்னார்.
"அவர்களுடன் வந்த இரண்டு ஆடவர்கள் எங்களை அச்சுறுத்தினர். ஆனால் அவர் கள் இந்தத் தாக்குதலில் ஈடு படவில்லை. அந்த இடத்திலிருந்து நாங்கள் வெளியேறத் தொடங்கும் போது அந்தச் சிறுமியர் தங்கள் கையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் எங்களைத் தாக்கத் தொடங் கினர். அதற்குப் பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் கண் விழித்துப் பார்க்கும் போது ஆம் புலன்ஸ் வண்டிக்குள் இருந்ததை அறிந்தேன்," என்றார். திருமதி ராஜேஸ்வரிக்கு தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். காயமடைந்த அவரது உற வினர் திரு பஞ்சவர்ணம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். பிரேதப் பரிசோதனை அவர் மாரடைப்பால் இறந்ததைக் காட்டுவதாக போலிஸ் உதவி ஆணையாளர் மியோர் ஃபரிடா லத்ராஷ் வாகிட் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமிகள் மூன்று பேரும் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். திரு பஞ்சவர்ணம் (56), துப் புரவாளராகப் பணிபுரிந்து வந்தார் என்றும் வாக்கு வாதத்தை நிறுத்த முயன்றதால் சிறுமிகளால் அடித்து உதைக்கப்பட்டு உயி ரிழந்தார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

