சாபாவில் நிலநடுக்கம்

சாபாவில் நிலநடுக்கம்

1 mins read

கோத்தா கினபாலு: சாபாவின் பல பகுதிகளை நேற்று 4.0 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் உலுக்கியதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர். நேற்று காலை 9.39 மணியளவில் கினபாலு மலையை ஒட்டிய சுற்று வட்டாரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கினபாலு மலையருகே உருவான இந்த நிலநடுக்கத்தை ரானாவ், கோத்தா கினபாலு, பெனம்பாங் மற்றும் துவாரான் பகுதியில் உள்ள மக்கள் உணர்ந்தனர். அதோடு, கினபாலு மலை உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மலையேறிகள் 3,080 மீட்டர் உயரத்தில் உள்ள பாகா முகாம் அருகே நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் வெளியே ஓடி வந்ததாகவும் அதன் ஊழியர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.