டமாஸ்கஸ்: சிரியாவில் அலெப்போ நகரில் அரசாங்கப் படை யினருக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும் வேளையில் அரசாங்கப் படையினர் இரு நாட்களுக்கு முன்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 சிறுவர்கள் கொல்லப்பட்டதாகக் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. அவர்களுடன் சேர்த்து பொதுமக்களில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
அரசாங்கப் படையினர் நாட்டு வெடிகுண்டு களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வேளை யில் அத்தகைய குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது.
சிரியாவில் போராளிகள் வசம் உள்ள அலெப்போ நகரில் அரசாங்கப் படையினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தாக்கியதில் குழந்தைகள் உள்பட சிறுவர்கள் பலர் உயிரிழந்தனர். கட்டட இடிபாடு களிலிருந்து இறந்த ஒரு குழந்தையை ஒருவர் வெளியில் கொண்டு வருகிறார். படம்: ஏஃஎப்பி

