மலேசியாவில் மாணவர்கள் பேரணி

மலேசியாவில் மாணவர்கள் பேரணி

2 mins read
015816bf-bf17-4c44-a90a-ff142c22dc6f
-

கோலாலம்பூர்: மலேசிய மாணவர் கள் மற்றும் இளைஞர் இயக்கங் களின் கூட்டு முயற்சியில் கோலாலம்பூரில் நேற்று நடந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான 1எம்டிபி நிறு வனத்தின் நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்றைய பேரணி நடத்தப்பட்டது. பேரணியை முன்னிட்டு ஆர்ப் பாட்டக்காரர்கள் நேற்று மதியம் 1.30 மணியளவில் கோலாலம்பூரில் சோகோ பேரங்காடிக்கு முன்பு ஒன்றுகூடத் தொடங்கினர்.

மஸ்ஜித் நெகாரா, மற்றும் சோகோ பேரங்காடி, உள்ளிட்ட மையப் பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர். எனினும் மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்பட்டது. இதற் கிடையே முறையான அனுமதி யின்றி இப்பேரணி நடத்தப்பட்ட தால் கோலாலம்பூரில் போலிசாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சோகோ பேரங்காடி அருகே ஒன்றுகூடிய பேரணி ஏற்பாட் டாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 2000 பேர் டத்தரான் மெர்டேக்கா நோக்கி நடக்கத் தொடங்கி யுள்ளனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் முழக்கங்கள் எழுப்பியவாறு நடந்து சென்றனர்.

பிற்பகல் 3 மணியளவில் பேரணியில் உரையாற்றிய பெர்சே 2.0 இயக்கத்தின் தலை வரான மரியா சின், பேரணியில் அதிகமானோர் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். டத்தரான் மெர்டேக்கா சதுக் கத்தை சென்றுசேர்ந்த ஆர்ப் பாட்டக்காரர்களை போலிசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப் பட்டது. இதனால் ஆர்ப்பாட்டக் காரர்களை அங்கு போடப்பட்டுள்ள தடுப்புகளுக்கு அருகே சாலை யில் உட்காரும்படி ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்ள சோகோ பேரங்காடிக்கு முன்பு ஒன்றுகூடிய மக்கள். எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் கூட்டம் இல்லை என்று கூறப்பட்டபோதிலும் ஏராளமானோர் நேற்றைய பேரணி யில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். படம்: மலேசிய இணைய ஊடகம்