தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

1 mins read
278c2de5-f9f0-4e1b-934e-ca838a346284
-

டாக்கா: பங்ளாதே‌ஷில் டாக்கா அருகே போராளிகள் மறைந் திருக்கும் பகுதியில் போலிசார் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக டாக்கா தகவல் கள் கூறின. சென்ற மாதம் டாக்கா உணவகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணகர்த்தா என்று சந்தேகிக் கப்படும் டமிம் செளத்ரி உள்பட மேலும் இரு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலிசார் கூறினர். உணவகத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை முதல் தேதி டாக்காவில் உள்ள பேக்கரி உணவகத்தினுள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் அங்கிருந்த பலரை கிட்டத்தட்ட 12 மணி நேரமாகப் பிணைப்பிடித்து வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த உணவகத்தினுள் அதிரடியாக நுழைந்த போலிசார் 13 பேரைக் காப்பாற்றினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை போலிசார் கைது செய்தனர். முன்னதாக துப்பாக்கிக்காரர்கள் பிணையாளிகளில் 20 பேரை சுட்டுக் கொன்றதாக போலிசார் கூறினர். அத்தாக்குதலில் போலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்கு உள்ளூர் தீவிரவாதக் குழுவே காரணம் என்று பங்ளாதேஷ் அதிகாரிகள் கூறிவந்தனர். டாக்கா அருகே போராளிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து போலிசார் நேற்று தாக்குதல் நடத்தினர். போலிசாரால் சுட்டுக் கொல்லப் பட்ட செளத்ரி 2013ஆம் ஆண்டு கனடாவிலிருந்து பங்ளாதே‌ஷிற்கு திரும்பி வந்ததாக போலிசார் கூறினர்.

போராளிகளுடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் ஒரு வீட்டுக்குள் நுழைகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்