நஜிப்: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்

நஜிப்: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்

1 mins read
05309206-4f0c-4881-8a52-d4f300f0fc4f
-

கோலாலம்பூர்: நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்ததற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் உள்பட தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் மிரட்டல் இருப்பதன் காரணமாக மலேசிய அரசாங்கம் கடுமையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார். மலேசியாவில் அண்மையில் நடப்புக்கு கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு மன்றச் சட்டம் குறித்து பலர் குறை கூறி வரும் வேளையில் திரு நஜிப் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்தச் சட்டத்தை நடப்புக்கு கொண்டுவந்ததன் மூலம் மலேசியப் பேரரசரின் அதி காரத்தைக் குறைக்க முயல்வதாக மலேசிய அரசாங்கத்தை சிலர் குறை கூறி வருவதாகவும் திரு நஜிப் கூறினார். கேமரன் ஹைலண்ட்ஸ் அம்னோ ஆண்டுக் கூட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய திரு நஜிப், "கடுமையான சட்டத்தை கொண்டுவந்ததற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது எனது கடமையாகும்," என்று கூறினார். ஐஎஸ் போராளிகளின் மிரட்டல் கள் உள்ள நிலையில் புதிய பாதுகாப்புச் சட்டம் மிகவும் அவசியம் என்று அவர் சொன்னார். புதிய பாதுகாப்புச் சட்டம் போலிசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறது.