டிரம்ப்: குடியேறிகளைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை உருவாக்குவேன்

டிரம்ப்: குடியேறிகளைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை உருவாக்குவேன்

1 mins read
444983fd-0ebc-481a-8f50-c6a834383307
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் குடி யரசுக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், குடி யேறிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு உதவும் நடை முறைகளை உருவாக்கப் போவ தாக அறிவித்துள்ளார். ஐயோவா தேர்தல் பிரசாரத் தில் பேசிய அவர், 'வெளியேறும் வழி' என்ற திட்டத்தின் விவரங் களை வெளியிட்டார். விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருக்கும் குடியேறிகளைக் கண்டுபிடிக்க இம்முறை உதவும் என்றார் அவர்.

மேலும் மெக்சிகோவுடனான அமெரிக்காவின் தெற்கு எல்லை யில் சுவர் எழுப்புவதற்கான தமது ஆதரவை திரு டிரம்ப் மறுபடியும் உறுதிப்படுத்தினார். சட்டவிரோத குடியேறிகள், பொது நல உதவிகள் பெறுவதையும் நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார். "மாபெரும் சுவரை எழுப்பப் போகிறேன். நாடு முழுவதும் விசா சோதனை முறையை அமலாக்கு வேன். சட்டவிரோதக் குடியேறிகள் சமூக நல உதவிகள் பெறுவதை நிறுத்துவேன். விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருப்பவர்கள் வெளியேறுவதை உறுதிப் படுத்தும் வழிமுறைகளை உரு வாக்குவேன். விசா காலா வதியாகும் தேதியை அமுல்படுத்தப் படாவிட்டால் திறந்துவிடப்பட்ட எல்லைகளை நாம் கொண்டிருப் பதாக அர்த்தம்," என்றார் அவர்.

ஐயோவா தேர்தல் பிரசாரத்தில் டோனல்ட் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்