தேவாலயம் மீது தாக்குதல், பதின்ம வயதினர் கைது

தேவாலயம் மீது தாக்குதல், பதின்ம வயதினர் கைது

2 mins read
8c5009ec-3625-4718-b233-b5d39705c20b
-

ஜகார்த்தா: மேடான் நகரில் உள்ள தேவாலயம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக பதின்ம வயதினர் ஒருவரை இந்தோனீசிய காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவனிடமிருந்து நாட்டு வெடி குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப் பட்டது. செயின்ட் யோசஃப் கத்தோலிக்கத் தேவாலயத்தில் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து அந்த 17 வயது இளையரும் உட்கார்ந்து இருந்தான்.

செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு சுமத்ரா மாகாணத்தின் காவல்துறை அதிகாரி ரினா சாரி ஜின்டிங், "அவன் வெடிபொருட்களுடன் முதுகில் பையைச் சுமந்து கொண்டிருந்தான்," என்று தெரி வித்தார். அவனுக்கு அருகில் அமர்ந் திருந்த ஒருவன், "சட்டையில் மறைத்து வைத்திருந்த பேட்டரி, சிறிய குழாய் போன்றவற்றை வெளியே எடுத்து வெடிகுண்டு போல எதையோ பொருத்திக் கொண்டிருந்தான்," என்றார்.

"சிறிது நேரத்தில் அவன் எழுந்து நின்றதும் முதுகு பையி லிருந்து புகையும் தீப்பொறிகளும் கிளம்பின. அப்போது போதகரை நோக்கி ஓடிய அவன் கத்தியால் தாக்க முயற்சி செய்தான். இதில் போதகர் சிறு காயங்களுடன் தப் பினார். இதற்கிடையே பிரார்த்த னைக் கூட்டத்துக்கு வந்த சிலர் அவனை மடக்கிப்பிடித்தனர்," என்று அவர் கூறினார். இதற்கிடையே தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவத்தை உறுதி செய்த தேசிய காவல்துறை பேச் சாளர் பாய் ரஃப்ளி அமர், தாக்கிய நபரின் முதுகுப் பையை காவல் துறையினர் சோதனையிட்டு வரு வதாகக் குறிப்பிட்டார்.

தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவனை பொதுமக்களில் சிலர் மடக்கிப் பிடித்தனர். அவனை அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி